உலகம்

இங்கிலாந்து நாடாளுமன்ற முதல் உரையில் தாயை நினைத்து மன்னர் சார்லஸ் உருக்கம்

(UTV |  இலண்டன்) – இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்கு மேலாக ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் (வயது 96) முதுமை தொடர்பான உடல்நல கோளாறுகளால் கடந்த 8ம் திகதி ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார்.

ராணியின் மறைவை தொடர்ந்து பட்டத்து இளவரசராக இருந்த சார்லஸ் (வயது 73) மன்னர் ஆனார். இங்கிலாந்தின் புதிய மன்னர் 3-ம் சார்லஸ் என அழைக்கப்படுவார். மறைந்த ராணி எலிசபெத்துக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. உறுப்பினர்களின் இரங்கலுக்கு மன்னர் சார்லஸ் நேற்று பதில் அளித்து பேசினார்.

அப்போது தனது தாயை நினைவு கூர்ந்து உருக்கமாக பேசினார். மன்னர் தனது உரையில் கூறியதாவது;

“..நமது ஜனநாயகத்தின் உயிர் மற்றும் சுவாசக்கருவி நாடாளுமன்றம். வில்லியம் ஷேக்ஸ்பியர் கூறியது போல் ராணி எலிசபெத், வாழும் அனைத்து இளவரசர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்தார். அவரை பின்பற்றி அரசியலமைப்பு நிர்வாகத்தின் விலைமதிப்பற்ற கொள்கைகளை நிலைநிறுத்துவேன். “என் அன்பான அம்மா” உடனான தொடர்புகள் நம்மைச் சுற்றிலும் காணப்படுகின்றன. வெள்ளி விழா நீரூற்று முதல் பழைய அரண்மனை முற்றத்தில் உள்ள சூரியக் கடிகாரம் வரை அவரது பொன்விழாவைக் குறிக்கும் அம்சங்கள் நிறைந்துள்ளன..” இவ்வாறு மன்னர் சார்லஸ் கூறினார். இங்கிலாந்து மன்னராக நாடாளுமன்றத்தில் சார்லஸ் உரையாற்றியது இதுவே முதல் முறையாகும்.

Related posts

சவுதி அரேபியாவை நோக்கி ஏவுகணை தாக்குதல்

எந்திரன் சிட்டியை போல கொலை செய்த ரோபோ!

கொரோனாவுக்காக பிரித்தானியா கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளது