உள்நாடு

அரச சேவையில் அத்தியாவசியமற்ற ஆட்சேர்ப்புகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

(UTV | கொழும்பு) – அரச சேவைக்கான அத்தியாவசியமற்ற ஆட்சேர்ப்புகளை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆனால் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் சேவைகளை பேண வேண்டிய தேவைக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட திணைக்கள ஊழியர்களையும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இன்று (13) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இதேவேளை, அரச சேவையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, அரச சேவையை மேலும் திறமையாகவும், உயர் மட்டத்திலும் பராமரிக்கும் நோக்கில், பல்வேறு துறைகளில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்தும் பணியில் அரசு தற்போது ஈடுபட்டுள்ளது.

அத்துடன், கடந்த காலங்களில் பணியமர்த்தப்பட்ட 60,000 அரச உத்தியோகத்தர்களுக்கு தேவையான இடங்களை ஒதுக்குவதற்கு உரிய குழு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ள பகுதிகள்

உண்மையான பௌத்தர்களாகிய நாம் மக்களை போதைப்பொருள் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்

முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக் கேட்டு தப்பி ஓட முயற்சிக்க வேண்டாம்.