(UTV | கொழும்பு) – அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில், நாட்டில் கடுமையாக கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கோதுமை மா போதுமான அளவு சந்தையில் இருப்பதாக என வர்த்தக அமைச்சர் அறிவித்துள்ள போதிலும், இந்தியா கோதுமை மாவு ஏற்றுமதியை நிறுத்தியதன் காரணமாக இறக்குமதியாளர்களால் இந்த நாட்டில் கோதுமை மாவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன் காரணமாக, இறக்குமதியாளர்கள் இந்தியாவில் இருந்து கோதுமை மாவு இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது துருக்கி மற்றும் துபாயில் இருந்து இலங்கை கோதுமை மாவை இறக்குமதி செய்து வருகிறது.
அந்த நாடுகளின் இறக்குமதியாளர்களால் ஆர்டர் செய்யப்பட்ட கோதுமை மாவின் இருப்பு இம்மாத இறுதியில் இலங்கையை வந்தடைய உள்ளது.
கொத்தும மாவு தட்டுப்பாடு காரணமாக பல பேக்கரிகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன.