(UTV | கொழும்பு) – மின்சாரம், நீர் கட்டணம் மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
விலைவாசி உயர்வினால் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது தொடர்பில் நாளைய தினம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அரசாங்கம் தலையிட்டால் கோழிக்கறி மற்றும் முட்டை விலையை குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கால்நடை தீவனத்திற்காக சோளத்தை இறக்குமதி செய்வதற்கு உரியவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.