உலகம்

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்பு

(UTV |  வாஷிங்டன்) – இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவு உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இங்கிலாந்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ராணி எலிசபெத் உடல் பால்மொரஸ் பண்ணை வீட்டில் இருந்து பக்கிம்காம் அரண்மனைக்கு கொண்டு வரப்படுகிறது.

அங்கு உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. 10 நாட்களுக்குபிறகு அவரது இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. வருகிற 19ம் திகதி வெஸ்ட் மின்ஸ்ட் அபே தேவாலய கல்லறையில் ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்படலாம் என தெரிகிறது.

இறுதி சடங்கில் பல உலக தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த இறுதி சடங்கில் பங்கேற்க போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவரிடம் நிருபர்கள் கேட்ட போது, இறுதி சடங்கில் நான் பங்கேற்பேன். நான் இன்னும் அரசர் சார்லசிடம் பேசவில்லை என்று தெரிவித்தார்.

ஜோ பைடன் லண்டன் புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகளை அமெரிக்கா வெள்ளை மாளிகை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணி எலிசபெத் இறுதி சடங்கு குறித்து இங்கிலாந்து உறுதியான தகவலை தெரிவித்ததும் ஜோ பைடன் லண்டன் சென்று இறுதி சடங்கில் பங்கேற்க உள்ளார்.

Related posts

அலெக்ஸி நவால்னிக்கு சிறைத்தண்டனை [UPDATE]

டிக்டாக் தொடர்ந்தும் சிக்கலில்

சிரியா மற்றும்பொலிவியாவில் பதிவானது முதல் மரணம்