உள்நாடு

ஒலிவ் எண்ணெய் விலை உயரும் அபாயம்

(UTV | கொழும்பு) – ஐரோப்பா முழுவதும் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ஒலிவ் பயிர்ச்செய்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், எதிர்காலத்தில் ஒலிவ் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படலாம் என ஸ்பெயின் ஒலிவ் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய ஒலிவ் உற்பத்தியில் ஐந்தில் இரண்டு பங்கை ஸ்பெயின் வழங்குகிறது.

இப்போதும் உலகளவில் ஒலிவ் எண்ணெய் விலை 14% அதிகரித்துள்ளதால், எதிர்காலத்தில் ஒலிவ் எண்ணெயின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியது.

Related posts

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் – இன்று முதல் ஆரம்பம்

ஓய்வூதியதாரர்களுக்கான அறிவித்தல்

ஜனாதிபதி அநுரவுக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

editor