உள்நாடு

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகத்தினை மூடத் தீர்மானம்

(UTV | கொழும்பு) –   நோர்வேயின் வெளிநாட்டு சேவையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக இலங்கையில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளது.

நோர்வே அரசாங்கம் வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை, ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள பல நோர்வே தூதரகங்களை வலுப்படுத்துவதை உள்ளடக்கியுள்ளதாக தூதரகம் குறிப்பிடுள்ளது.

இந்த சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, 2023 ஜூலை இறுதிக்குள் கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் உட்பட வெளிநாடுகளில் உள்ள ஐந்து நோர்வே தூதரகங்களை நிரந்தரமாக மூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு – சாட்சிகளை விசாரிக்க திகதி நியமனம்

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

சீனத் தடுப்பூசிகள் இன்னும் ஒரு வாரத்தில் இலங்கைக்கு