(UTV | கொழும்பு) – கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன, கோட்டை பொலிஸில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை இன்றைய தினம்(08) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நடிகை தமிதா அபேரத்ன நேற்றைய தினம்(07) தியத்த உயனவுக்கு எதிரே உள்ள பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ‘மௌன நேரம்’ என்ற தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டார்.
சட்டவிரோதமாக கூடியிருந்தமை, ஜனாதிபதி அலுவலகத்திற்கு சட்டவிரோதமாக பிரவேசித்தமை மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகளுக்காக நடிகை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கலைஞர்கள் போன்றவர்களை அரசாங்கம் வெறுப்பதாகவும் அவர்களைக் கண்”ட இடத்தில் கைது செய்வதற்கு அரசாங்கம் சிந்தித்து வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரச மிலேச்சத்தனம் மற்றும் அரச வன்முறைகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மக்களுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக போராடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.