உள்நாடு

‘திவாலாகிவிட்ட அரசாங்கத்தால் செய்யக்கூடியது வரம்புக்குட்பட்டது என்பதை உணருங்கள்’

(UTV | கொழும்பு) – திவாலாகிவிட்ட நாட்டில் திவாலான அரசாங்கத்தினால் செய்யக்கூடியவை மட்டுப்படுத்தப்பட்டவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி என்பது பிரச்சினைகளை எழுப்புவதற்கு மட்டுமல்ல, அரச அதிகாரம் இல்லாமல் நாட்டுக்காக வேலை செய்வதற்கும் இருப்பதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க 150 மில்லியன் பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஐம்பது அரச வைத்தியசாலைகளுக்கு எதிர்க்கட்சிகளின் மூச்சுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார். கல்வித்துறையை கட்டியெழுப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts

பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு

கல்முனை மாநாகர சபையில் ஊழல் – சீ.ஐ.டியால் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கம்மறியல்

மணல் விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்