உள்நாடு

இங்கிலாந்து புதிய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

(UTV | கொழும்பு) – ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட லிஸ் ட்ரஸ்ஸுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இருதரப்பு மற்றும் கலாசார உறவுகள் தொடர்ந்தும் வளர்ச்சியடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2-ம் திகதி முடிவடைந்தது.

இந்தத் தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்று, நாளை பிரதமராக பதவியேற்க உள்ளார்.

Related posts

தமிழ், சிங்களப் புத்தாண்டு – அரசின் புதிய சட்டதிட்டங்கள்

ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரும் கடிதத்தில் ரஞ்சன் கையெழுத்திட்டார்

வரட்சியான காலநிலை – சில வனப்பகுதியில் காட்டுத்தீ