உள்நாடு

அரச ஊழியர்களுக்கு 05 வருட விடுமுறை

(UTV | கொழும்பு) –  ஓய்வூதியம் பெறும் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளமின்றி விடுமுறை வழங்குவதற்கான குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, மூத்த அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்று, மூப்புக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அதிகபட்சமாக 05 வருடங்களுக்கு உட்பட்ட ஓய்வூதியம் பெறும் அரச உத்தியோகத்தர்களுக்கு உள்ளூரில் விடுமுறை வழங்குவது தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டிருந்தது.

ஜூன் 13ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி, பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு உரிய குழுக்களின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் வகையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

வைத்தியர் ஷாபியின் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நீதவான் உத்தரவு

editor

முட்டை விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் இறக்குமதி

“21 பணிப்புறக்கணிப்பில் மாற்றமில்லை”