உள்நாடு

‘இலங்கைக்கு இயன்ற அளவு உதவி செய்ய வேண்டும்’ – அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி

(UTV | கொழும்பு) –   அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையின் திறமையான பணியாளர்கள் திறமையான ஒரு குழுவாக இருப்பதாக முன்னாள் குடிவரவு அமைச்சர் Alex Hawke தெரிவித்துள்ளார்.

பல இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்து வெற்றிகரமான எதிர்காலத்தை கட்டியெழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய பெடரல் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா-இலங்கை உறவுகள் 75 வருடங்கள் பின்னோக்கி செல்வதாக அலெக்ஸ் ஹோக் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பொருளாதாரம் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் எரிபொருள், உணவு மற்றும் மருந்து விடயங்களில் ஸ்திரமற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய தொழிலாளர் கட்சி எதிர்க்கட்சி என்ற வகையில் இலங்கைக்கு இயன்றவரை உதவுமாறு அரசாங்கத்தை வற்புறுத்துவதாக முன்னாள் குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக் தெரிவித்துள்ளார்.

மேலும், சுற்றுலாத் துறையை உயர்த்துதல், கடன் மறுசீரமைப்பு போன்ற விஷயங்களில் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

Related posts

உயர்தரப் பரீட்சையின் போது பாடசாலைகளை மூடுமாறு கோரிக்கை

கட்சியின் தலைமை தொடர்பில் செயற்குழுவில் அறிவிக்கவும்

இராணுவ தளபதிப் பதவியில் இருந்து ஷவேந்திர விடைபெறுகிறார்