விளையாட்டு

ஆசியக் கிண்ணம் 2022 : பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்தியா

(UTV |   துபாய்) – துபாயில் இன்று நடைபெற்ற ஆசியக் கிண்ண டி20 போட்டியின் சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளை எதிர்கொண்டு, 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 28 ரன்கள் சேர்த்தார். அத்துடன், டி20 போட்டிகளின் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனை படைத்தார்.

மற்றொரு துவக்க வீரரான கே.எல்.ராகுலும் 28 ரன்கள் விளாசினார். மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக ஆடி 60 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 13, ரிஷப் பண்ட் 14, தீபக் ஹூடா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் ரிஸ்வான் 71 ரன்கள் குவித்தார். கேப்டன் பாபர் ஆசம் 14 ரன்னும் சமான் 15 ரன்னும் எடுத்தனர். முகமது நவாஸ் 42 ரன் அடித்தார். ஷா 14 ரன்களும், ஆசிப் அலி 16 ரன்களும் அடித்தனர்.

பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related posts

ஆசிய க்ராண்ட்பிரிக்ஸ் மெய்வல்லுனர் போட்டிகளுக்காக இலங்கை மெய்வல்லுனர்கள் 12 பேர்

தென் கொரிய ஹாக்கி வீரர்கள் தெற்கில் கூட்டு அணிக்காக வருகிறார்கள்

உலகின் முதல் 20 ஓட்டப்பந்தய வீரர்களில் யூபுன்