உள்நாடு

சுயேச்சை கட்சி ஒன்றியத்தின் ‘பதில் கூட்டணி’ இன்று உதயமாகிறது

(UTV | கொழும்பு) – சுயேச்சை கட்சி ஒன்றியத்தின் நல்லிணக்கத்தில் இருந்து உதயமாகும் புதிய கூட்டணியின் மக்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண பொது மாநாடு இன்று (04) பிற்பகல் 3.00 மணிக்கு மஹரகம இளைஞர் சேவை சபை கேட்போர் கூடத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதிய கூட்டணிக்கு ‘பதில் கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ச – வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் இந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர்.

நாட்டின் பிரச்சினைகளை வளர்த்து உண்பதற்குப் பதிலாக, பிரச்சினைகளால் சோர்ந்துபோயிருக்கும் நாட்டுக்கு பதில் வழங்கும் ‘ பதில் கூட்டமைப்பினை’ சுதந்திரக் கட்சி கூட்டணி அமைக்கும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தனது அணியின் அரசியல் ஒருமைப்பாடு மற்றும் அரசியல் ஒருங்கிணைப்பை மேலும் தீவிரமாகவும் ஆற்றலுடனும் உருவாக்கி நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் பெரும் மதிலை உருவாக்குவதே இதன் நோக்கம் எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு தீவிரமான எதிர்காலம் தேவை என்பதை புரிந்து கொள்ளும் இளம் தலைமுறையினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பதில் கூட்டணியாக இது அமையும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

சுயேச்சைக் கட்சிகளின் ஒற்றுமையினால் உருவாக்கப்பட்ட பதில் கூட்டமைப்பில் ஏனைய அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புக்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களை இணைத்துக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டு நாட்டின் வரலாற்றுத் திருப்புமுனையின் ஆரம்பத்திற்கு பங்களிக்குமாறு அனைவருக்கும் பகிரங்க அழைப்பை விடுப்பதாகவும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

புதிய விரைவான அன்டிஜென் பரிசோதனை அறிமுகம்

தீர்வுகளை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்ல வழிமுறைகளை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

editor

ராஜபக்ஸக்கள் தற்போது ஸ்டான்மோர் கிரசென்ட்டில் உள்ள உத்தியோகபூர்வ அரசாங்க பங்களாவிற்கு குடிபெயர்வு