உள்நாடு

காலி-கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து மட்டு

(UTV | கொழும்பு) – இன்று (04) பிற்பகல் 12.10 மணி முதல் இரவு 8.00 மணி வரை காலி – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

சீனிகம ஸ்ரீ மகா தேவோல் ஆலயத்தின் வருடாந்த தேரோட்டம் காரணமாக இது இடம்பெற்றுள்ளது.

சீனிகம கோவிலில் இருந்து கல்லுப்பாறை வழியாக கொழும்பு நோக்கி ஊர்வலம் சென்று தெல்வத்த சந்தியில் வலப்புறம் திரும்பி பழமையான தோட்டகமுவ ரன்பத் ரஜமஹா விகாரையை அடைந்து மீண்டும் அதே பாதையில் கோவிலை வந்தடையும்.

அவ்வேளையில் காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனப் போக்குவரத்தை ஒரு பாதையில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அசௌகரியத்தை குறைக்க மாற்று வழிகளை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, மாத்தறை கரை வீதியில் அமைந்துள்ள அன்னையின் ஆலய வருடாந்த உற்சவம் காரணமாக அது தொடர்பான பல வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, இன்று (04) முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலான காலப்பகுதியில் குறித்த வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.

Related posts

அரசின் பங்காளிக் கட்சிகளின் பொது மாநாடு

“எதிர்காலத்தில் மின்வெட்டு இருக்காது” – கம்மன்பில

பாகிஸ்தான் கடற்படை பிரதம அதிகாரி – பிரதமர் இடையே சந்திப்பு