உள்நாடு

விமான நிலையத்தில் எரிபொருள் தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் செயற்பாடுகளுக்கு போதிய எரிபொருள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் நாளாந்த செயற்பாடுகளுக்காக சுமார் 13 இலட்சம் லீட்டர் ஜெட் எரிபொருள் தேவைப்படுவதாகவும், எதிர்வரும் மாதங்களில் சுற்றுலாப் பருவம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்தத் தேவை சுமார் 14 இலட்சம் லீட்டராக அதிகரிக்கும் எனவும் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு வருகை தந்த அமைச்சர், விமான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வது பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பொறுப்பாகும்.

தற்போது சேமித்து வைக்கப்பட்டுள்ள விமான எரிபொருள் 10 அல்லது 15 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்பதால், அதன் பின்னர் இந்த விமான எரிபொருளை வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்வு

பாராளுமன்றம் காலை கூடியது

அதிகரிக்கும் கொவிட் 19 தொற்றாளர்கள்