உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதத்தில்

(UTV | கொழும்பு) – உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2018 இல் நடத்தப்பட்டு 2022 இல் முடிவடையத் திட்டமிடப்பட்டது, ஆனால் அமைச்சரின் அதிகாரத்தின் கீழ் அவை 2023 வரை நீட்டிக்கப்பட்டது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களுக்கு செப்டம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்த முடியும் என நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வாக்காளர் பட்டியல்கள் சான்றளிக்கப்படவுள்ளதால், உள்ளூராட்சித் தேர்தலை பின்னர் நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜூலை முதல் ஆரம்பப் பாடசாலைகளை திறக்க தீர்மானம்

மரதன் ஓட்ட போட்டியில் கலந்து கொண்ட மாணவன் மரணம்-திருக்கோவில் வைத்தியசாலை முன்பாக போராட்டம்

சித்தாலேப்ப தைல குழுமத்தின் தலைவர் விக்டர் ஹெட்டிகொட காலமானார்