உள்நாடு

‘சீன உரம் அல்லது இரசாயன உரம் : தோல்வியில் முடிந்தது’

(UTV | கொழும்பு) –  சீன உரக் கப்பலுக்கு செலுத்தப்பட்ட 6.9 மில்லியன் டொலர்கள் அல்லது அதற்குப் பதிலாக இரசாயன உரங்களைப் பெற்றுக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (1) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசிக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் ஆராய்ந்து தீர்வுகளை முன்வைப்பதற்காக விவசாய அமைச்சின் செயலாளர் தலைமையில் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எமது மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே விவசாய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

நுவான் துஷாரவுக்கு கொவிட் உறுதி

பொலிஸாரின் வாகனத்தின் மீது தாக்குதல் – ஒருவர் கைது

ஜுவைரியா மொஹிதீனுக்கு 2020 Front Line Defenders விருது