(UTV | கொழும்பு) – இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் சற்று நேரத்திற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் 48 மாத வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் விரிவான நிதியுதவி வசதிகள் வழங்கப்படும் என டுவிட்டர் செய்தியில் அந்த நிதியம் தெரிவித்துள்ளது.
IMF staff and Sri Lankan government officials have reached a staff-level agreement to support the country’s economic policies with a 48-month arrangement under the Extended Fund Facility (EFF) of about US$2.9 billion: https://t.co/5JCr2XAw6y | (iStock/Shakeel Sha) pic.twitter.com/o4TAzUztsE
— IMF (@IMFNews) September 1, 2022