உள்நாடு

கோழி இறைச்சி உட்பட 33 வகையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி

(UTV | கொழும்பு) – கோழி இறைச்சி உட்பட 33 வகையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.

நிபந்தனைகளுடன் கோதுமை மா, முட்டை, பருப்பு, கோழி இறைச்சி உள்ளிட்ட 33 அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விற்பனைக்கு சந்தர்ப்பம் வழங்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகாரசபை நேற்று (30) வெளியிட்டுள்ளது.

அறிவிப்பின் கீழ், ஒரு வாடிக்கையாளர் ஒரு நியாயமான காலத்திற்குள் கோரப்பட்ட தயாரிப்பை தாமதமின்றி வழங்க வேண்டும்

போதிய அளவு மூலப்பொருட்களை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு முறை பொருட்களை விற்பனை செய்யும் போதும், அந்த பொருளின் ரசீதை (பில்) வாடிக்கையாளரிடம் கொடுத்து, அதன் நகலை கடையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

திரு. நடேசன் இன்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்

உப்பு உற்பத்தி 40 வீதத்தால் குறைந்தது – இறக்குமதி செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

editor