உள்நாடு

கொழும்பில் இன்று பலத்த பாதுகாப்பு

(UTV | கொழும்பு) –  இன்று (30) நடைபெறவுள்ள போராட்டத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கொழும்பு நகரில் பாதுகாப்பை பலப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.ஜே.சந்திர குமார தெரிவித்துள்ளார்.

இந்த பாதுகாப்பு புலனாய்வு பிரிவின் கீழ் ட்ரோன் கெமராக்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கலவர தடுப்பு பிரிவுகளும் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையின் ஆதரவைப் பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறைச் செயல்கள் இடம்பெற்றால் சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்படுவார்கள் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற கட்டிடம் அமைந்துள்ள தியவன்னா ஓயா வரை பாதுகாப்புக்காக விசேட கடற்படை குழு கப்பல்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

Related posts

கடல் மார்க்கமாக பறவைகள் மற்றும் ஊர்வன கடத்தல்.

இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் வைரஸ்!

வாகன விபத்தில் உப பொலிஸ் அதிகாரி பலி