உள்நாடு

IMF பேச்சுவார்த்தைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு

(UTV | கொழும்பு) – இலங்கைக்கும் அமெரிக்க வர்த்தகங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது தொடர்பில் அமெரிக்க-இலங்கை வர்த்தக சபையுடன் கலந்துரையாடியதாக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தெரிவித்தார்.

இப்போதும் சுமார் 180,000 இலங்கைத் தொழிலாளர்கள் அமெரிக்க-இலங்கை இருதரப்பு வர்த்தகத்தில் ஆதரவைப் பெறுகின்றனர் என்று அவர் கூறினார்.

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி பொருட்களை அனுப்புவதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் பில்லியன்களை பங்களிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரங்கள் வழங்குதல் மற்றும் பொது நிதி மேலாண்மைக்கான கல்வி பரிமாற்ற திட்டங்கள் மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் சில உடன்பாடுகள் எட்டப்பட்டால், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்கு மேலும் ஆதரவளிக்க முடியும் எனவும் ஜூலி சாங் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தரங்குறைந்த 34 ஆயிரம் முகக் கவசங்கள் மீட்பு

இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் அமெரிக்க அதிகாரி

அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம்