உள்நாடு

திங்கள் முதல் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தும் நெருக்கடியில்

(UTV | கொழும்பு) – இன்றைய தினம் தமது வாகனங்களுக்கு எரிபொருள் வழங்காவிட்டால் திங்கட்கிழமை முதல் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்ல முடியாது என அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதன் தலைவர் எல் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் களஞ்சியசாலையிலிருந்து எரிபொருளை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Related posts

‘நாடாளுமன்றம் மக்களின் விருப்பத்தை சிதைத்துள்ளது’

தடுப்பூசி அட்டைக்கு பதிலாக அலைபேசி செயலி

ஷானி – அநுர தனித்தனியாக ரீட் மனுத்தாக்கல்