உள்நாடு

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவிற்கு புதிய பொறுப்பு

(UTV | கொழும்பு) – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர, நீதித்துறை பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக இருந்து பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபரினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதிக்கு அமைய, கடந்த 22ஆம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

2020 O/L : பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு

‘உரு ஜுவா’ இனது சகா கைது

தனக்கு உள்ள ஒரேயொரு சவால் – நாமல்

editor