(UTV | கொழும்பு) – எரிபொருள் பற்றாக்குறையால் தனியார் பேருந்துகளின் ஓட்டம் 25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், தொலைதூரப் பேருந்துகளும் 25% ஆகக் குறைந்து கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இன்று (28) தனியார் பஸ்களுக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால் நாளை(29) பேரூந்துகள் முழுமையாக இயங்காது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தட்டுப்பாடு, ஏற்றுவதில் தாமதம் மற்றும் எரிபொருள் நிலையங்களின் ஆர்டர்களை தாமதமாக செலுத்துவதே எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் நிற்பதற்கு காரணம் எனவும், அவற்றை குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அடுத்த 3 நாட்களில் இந்த விடயத்தினை மறுஆய்வு செய்து அனைத்து எரிபொருள்களதும் கூடுதல் இருப்புகளையும் விநியோகிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.