உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதியின் விசேட மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 2021 ஜனவரியில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக இலங்கை நடிகரும் அரசியல்வாதியுமான நேற்று நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தான் கூறிய கருத்து உண்மைக்குப் புறம்பானது என்றும், கூறிய கருத்துகளை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதியின் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்புக்கான ஆவணத்தில் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடக்கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு மன்னிப்பு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று இதுவரையில் 121 பேருக்கு கொரோனா [UPDATE]

பிறப்பு சான்றிதழ் பெற்றுக்கொள்வதில் ஏற்றப்பட்டுள்ள புதிய மாற்றம்!

ஆசிரிய இடமாற்றத்திற்கு எதிராக இடைக்காலத் தடை – கிழக்குமாகாண மேல் நீதிமன்றம்