(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமர் பதவிக்கு நியமிப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை எனவும் அவ்வாறு பிரேரணை முன்வைக்கப்பட்டால் அதற்கு சம்மதம் தெரிவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உடுகொட நேற்றைய தினம் (25) தெரிவித்தார்.
69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியாகவும், போரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற அதிகாரியாகவும் கோட்டாபய ராஜபக்ச நாட்டுக்கு வருவதற்கு எந்தத் தடையும் இல்லை என பிரதீப் உடுகொட தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கை திரும்புவதற்கான உரிமையை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் தீர்மானங்கள் குறித்து அவரால் அறிக்கை வெளியிட முடியாது எனவும் உடுகொட மேலும் தெரிவித்தார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காரியாலயத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உடுகொட தெரிவித்தார்.