(UTV | கொழும்பு) – இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் இன்று மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
இன்று மற்றுமொரு கலந்துரையாடலை நடாத்துவதற்கும், தொழில்நுட்ப பிரச்சினைகள் தொடர்பில் எதிர்காலத்தில் மத்திய வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள்.
இந்த விஜயத்தின் நோக்கம் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து விசாரிப்பதே வேலை நிலையிலான ஒருமித்த கருத்தை எட்டுவதாக சர்வதேச நாணய நிதியம் முன்னர் அறிவித்தது.