உள்நாடு

பேருந்து சேவை மீண்டும் குறைகிறது

(UTV | கொழும்பு) – நாளை (26) முதல் தனியார் பஸ் சேவை 50 வீதத்திற்கு மேல் குறையலாம் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி உருவாகி வருவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிபோவில் இருந்து சரியான முறையில் டீசல் சப்ளை செய்யப்படவில்லை என்றும், இன்று பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

தென் மாகாணத்தில் இன்றும் பல பேருந்துகள் இயங்க முடியாத நிலையில் இருப்பதாகவும், இது தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து உடனடி பதிலை எதிர்பார்ப்பதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

MV Xpress pearl கப்பலின் கெப்டன் CID இனால் கைது

ஐ.தே.க. தேசிய அமைப்பாளராக சாகல

அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசத்தை நீடிக்க தீர்மானம்

editor