விளையாட்டு

பும்ரா, அப்ரிடியை பின்னுக்கு தள்ளிய ரபாடா

(UTV | கொழும்பு) – டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இந்த தரவரிசையில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 2 இடங்கள் முன்னேறி உள்ளார்.

இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 5 விக்கெட்டுகளையும் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரபாடா இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா-அப்ரிடி ஆகியோரை பின்னுக்கு தள்ளி தரவரிசையில் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

ரபாடா 836 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் அப்ரிடி-பும்ரா 828 புள்ளிகளுடன் 4,5-வது இடங்களிலும் உள்ளனர். முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான கம்மின்ஸ் தொடர்கிறார்.

Related posts

மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்தாட்ட தொடர் சீஷெல்ஸ் வசமானது

இலங்கை – பங்களாதேஷ் ரெஸ்ட் கிரிக்கட் தொடர் மார்ச் 7ம் திகதி ஆரம்பம்

தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியது!