உள்நாடு

சீன கடன்கள் தொடர்பில் ரணிலின் விசேட கோரிக்கை

(UTV | கொழும்பு) – கடன் நிவாரணம் தொடர்பில் சீனாவின் நிலைப்பாட்டை கணிசமான அளவு மாற்றிக்கொள்ளுமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் முன்னணி பொருளாதார பத்திரிகைகளில் ஒன்றான Nikkei Asia விற்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒப்பந்தத்தை எட்டுவது இலகுவான விடயமல்ல என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

“கடனை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தையும் அனைத்து கடனாளிகளுக்கும் சமமாக செய்ய வேண்டியதன் அவசியத்தை நாங்கள் சீன அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளோம்” என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

கடனை மறுசீரமைப்பதற்கு பதிலாக கடனை அடைக்க புதிய கடனுதவி வழங்க சீனா முன்வைத்துள்ள பிரேரணை சிக்கலானது என அவர் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சீனா, நிச்சயமாக, வேறுபட்ட அணுகுமுறையை எடுத்துள்ளது. எனவே, மற்ற கடன் கொடுக்கும் கட்சிகள் சீனாவுடன் என்ன ஒப்பந்தம் செய்யலாம்? அது போக வேண்டிய விஷயம்.”

கடனைத் திருப்பிச் செலுத்தாத மேற்கத்திய இறையாண்மைப் பத்திரங்கள் உட்பட இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 51 பில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளது.

இதேவேளை, 2001ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை, இலங்கைக்கான சீனாவின் கடனுதவி, 9.95 பில்லியன் டொலர்களை அண்மித்துள்ளதாக சுயாதீன பொருளாதார நிபுணர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

🛑 BREAKING NEWS = பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் பலியான அரசியல்வாதி!

ரஞ்சன் நீதிமன்றில் முன்னிலை

“எரிபொருள் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு மட்டும் காரணமல்ல”