உள்நாடு

இலங்கை – சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தை இன்றும்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியக் குழு, இலங்கைக்கான வருங்கால IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாடு தொடர்பாக பல பங்குதாரர்களுடன் இன்று கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது.

பீட்டர் ப்ரூயர் மற்றும் மசாஹிரோ நோசாகி தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு செவ்வாயன்று நாட்டை வந்தடைந்தது.

அவர்களின் வருகையின் நோக்கம், விரைவில் ஒரு வருங்கால IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் மீது பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை எட்டுவதில் முன்னேற்றம் காண்பதாகும்.

இதேவேளை, நாடு எதிர்நோக்கி வரும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

IMF தூதுக்குழு மற்றும் அரச தலைவர் ஆரம்ப சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் தற்போதைய நெருக்கடி குறித்தும் விவாதித்தனர்.

இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகளுடன் தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் தொடரும் அதேவேளை, மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை நாளை (26) நடைபெறவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் பிருயர், பிரதித் தூதுவர் ஒசாரியோ கொசைகோ, சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி டுபாகஸ் பெரிதானுசேத்யவானந்த், மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

நேற்று காலை மத்திய வங்கி வளாகத்தில் இலங்கை பிரதிநிதிகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவினர் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

Related posts

கணக்காய்வு அதிகாரிகள் இன்றும் தொழிற்சங்க நடவடிக்கையில்

ஹோட்டல் உணவு வகைகளின் விலைகளும் உயர்வு

டிஜிட்டல் ID இற்கு இந்தியாவின் உதவி