(UTV | கொழும்பு) – ஒரு முட்டையை அதிகபட்ச சில்லறை விலையாக 50 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இணங்கியுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வர்த்தக அமைச்சரை நேற்று (24) சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அந்த சங்கத்தின் இணை செயலாளர் துமிஷ்க சுபசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விவசாயிகள் ஏற்கனவே மாதாமாதம் கோழிகளை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.