கிசு கிசு

“கோட்டாவின் தாய்லாந்து செலவு கோடிக்கணக்கில், இரண்டு வாரங்களில் மீண்டும் இலங்கைக்கு”

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் இரண்டு வாரங்களில் இலங்கை திரும்புவார் என ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு ஆதாரங்களை மேற்கோள் காட்டி குறித்த செய்திச் சேவை இதனைத் தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கு அவர் தாய்லாந்தில் தங்கியிருந்த செலவுக்கும் ஓரளவு தொடர்பு இருப்பதாக ஒரு ஆதாரம் கூறியது.

கோட்டாபய ராஜபக்ச ஜூலை 13 அன்று நாட்டை விட்டு வெளியேறி ஒரு நாள் கழித்து ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தார்.

முதலில் மாலைதீவு சென்ற முன்னாள் ஜனாதிபதி ஜூலை 14ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார். பின்னர் அவர் தாய்லாந்து புறப்பட்டு சென்றார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி இலங்கைக்கு திரும்பவுள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவரது பாதுகாப்பு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதால் விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“அவர் நிச்சயமாக திரும்பி வர விரும்புகிறார். ஆனால் பாதுகாப்பே பிரதான பிரச்சினை மற்றும் அவர் நாடு திரும்புவதை தாமதப்படுத்துமாறு புலனாய்வு அமைப்புகள் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளன” என்று இலங்கை அரசாங்க அதிகாரி ஒருவர் ரொய்டர்ஸிடம் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தாய்லாந்தில் தங்கியதற்கான அதிக செலவு அவர் விரைவில் திரும்புவதற்கு ஒரு காரணியாக இருந்ததாக இரண்டாவது ஆதாரம் கூறியது.

“தனியார் ஜெட் விமானம், சொகுசு தங்குமிடம் மற்றும் 24 மணி நேர பாதுகாப்பு ஆகியவை உள்ளடங்கியதால், செலவு இப்போது கோடிக்கணக்கான ரூபாயாக உயர்ந்துள்ளது” என்று அந்த வட்டாரம் மேற்கோளிட்டுள்ளது. “இது கட்டுப்படியாகாது.”

ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான மற்றொரு ஆதாரத்தின்படி, செலவுகள் பெரும்பாலும் அவரது ஆதரவாளர்கள் சிலரால் ஏற்கப்படுகின்றன என்று ரொய்டர்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மத்திய வங்கி ஆளுநரை பதவி விலக்க ஆலோசிக்குதாம்..

வஞ்சகமின்றி கொரோனா சமூத்தினுள் பரவும் அபாயம்

டிரம்பின் தலைக்கு 80 மில்லியன் டொலர்