உள்நாடு

சீனாவில் இருந்து மாணவர்களுக்கு சீருடைகள்

(UTV | கொழும்பு) – 2023 ஆம் ஆண்டிற்கான பாடசலை சீருடைத் தேவையின் ஒரு பகுதியை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு தாங்கள் இணங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாடசாலை சீருடைக்குத் தேவையான மீதித் தொகையை உள்ளுர் விநியோகஸ்தர்களிடமிருந்து கொள்வனவு செய்ய உள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் பாடசாலை மாணவர்களுக்கு துணிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடை வழங்குவதற்கு பதிலாக சீருடை கொள்வனவுக்கான வவுச்சர் வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சீன அரசாங்கம் 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை தேவையின் ஒரு பகுதியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு தாங்கள் இணங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாடசாலை சீருடைக்குத் தேவையான மீதித் தொகையை உள்ளுர் விநியோகஸ்தர்களிடமிருந்து கொள்வனவு செய்ய உள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் பாடசாலை மாணவர்களுக்கு துணிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கு பதிலாக, சீருடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சரை வழங்குவது தொடர்பில் அமைச்சர்கள் சபையில் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சனத் நிஷாந்தவின் வெற்றிடத்திற்கு ஜகத் பிரியங்கர!

கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ

எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தடையின்றிய மின்சாரம்