உள்நாடு

வசந்த முதலிகே 90 நாள் காவலில் வைக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்

(UTV | கொழும்பு) – அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் இரண்டு செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய அரசு தொழிற்சங்கங்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிக்குமாறு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மூவரையும் தடுத்து வைக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்கள் போராட்டத்தின் போது பயங்கரவாதம் ஈடுபட்டதா என கேள்வி எழுப்பிய ஸ்டாலின், இதுபோன்ற சூழ்நிலையில் எதிர்காலத்தில் சில நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிராக எழும் போராட்டங்கள் தொழிற்சங்கங்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் என்றும் கூறினார்.

இவ்வாறான செயற்பாட்டின் மூலம் இலங்கையானது உலகில் பின்னோக்கி நகர்ந்து வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வசந்த முதலிகே, ஹசாந்த குணதிலக்க மற்றும் வண. கல்வல சிறிதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 18 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ​​மூவர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த குழுவில் 15 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 19 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

வசந்த முதலிகே, ஹசாந்த குணதிலக்க மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டதுடன், மற்றுமொருவர் ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரும் பாதுகாப்பு அமைச்சரின் அனுமதிக்கு உட்பட்டு முதலில் 72 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பிற்கு 10 மணித்தியால நீர்வெட்டு

பாகிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இருதரப்பு பேச்சுவார்த்தை

இன்று அரச விடுமுறை தினம் அல்ல