(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கை பெற எதிர்பார்க்கப்படும் கடன் வசதி இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
Bloomberg அலைவரிசைக்கு வழங்கிய நேர்காணலில் மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் கடன் முகாமைத்துவ உத்திக்கு அனைத்து வெளி கடனாளிகளும் இணங்கினால் அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் கடனை பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிடுகின்றார்.
உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்காமல் நிலைமையை நிர்வகிக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.