கிசு கிசு

கோட்டா 24 அன்று வரமாட்டார்

(UTV | கொழும்பு) – தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அன்றைய தினம் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவர் இலங்கை திரும்பும் திகதி குறித்து எந்த தகவலும் இல்லை. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம் ஜனாதிபதிக்கும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

Related posts

ராஜீவ் காந்தி படுகொலை: இலங்கைக்கு நாடு கடத்த ஏற்பாடு(VIDEO)

சென்னை மார்க்கெட்டில் காய்கறி விற்ற சமந்தா?

உண்மையை வெளியிட்ட பிரபல நடிகை?