உள்நாடு

பொலிஸ் கைதில் இருந்து ஜெஹான் அப்புஹாமி தப்பிப்பு

(UTV | கொழும்பு) – பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ​​பொலிஸ் அணியிலிருந்து தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நடிகர் ஜெஹான் அப்புஹாமி பற்றிய எந்தத் தகவலையும் பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது தொடர்பாக, நீதிமன்றத்தில் பொலிசார் உண்மைகளை தெரிவித்ததையடுத்து, ஜெஹான் அப்புஹாமியின் கடவுச்சீட்டிற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் கடந்த 18ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஜெஹான் அப்புஹாமியை பொலிஸ் குழுவொன்று கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மருதானை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் இது இடம்பெற்றுள்ளது.

பின்னர் சந்தேக நபர்களை அழைத்துச் செல்வதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த பேருந்தில் அவர்களை அழைத்துச் செல்வதற்காக மற்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவிடம் அவர் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அதிகாரிகள் பேருந்தில் சென்று சோதனையிட்டபோது ஜெகன் அப்புஹாமி இல்லை. இதுகுறித்து பேருந்தை ஒப்படைத்த அதிகாரிகளிடம் கேட்டபோது, ​​ஜெஹான் காவலில் இருந்து தப்பியதாக தெரிவித்தனர்.

பின்னர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸின் ஆலோசனையின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அவர் ஓடிவிட்டாரா அல்லது அவர் விடுவிக்கப்பட்டாரா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக அது இருந்தது.

இது தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் வினவியபோது, ​​சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இதுவரை அடையாளம் காணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், ஜெஹான் அப்புஹாமிக்காக நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, தமது கட்சிக்காரரை பொலிசார் ஒரு போதும் கைது செய்யவில்லை எனவும், பொலிஸாரால் தங்கியிருக்குமாறு கூறப்படாததால் அவர் வெளியேறியதாகவும் தெரிவித்தார்.

  • ஆர்.ரிஷ்மா 

Related posts

சர்வக்கட்சி மாநாட்டில் தமிழ் தேசியகட்சிகள் முன்வைக்கவுள்ள கோரிக்கைகள் …

BreakingNews: எரிபொருள் விலையில் நள்ளிரவு முதல் திருத்தம்

தொற்றுக்குள்ளான மேலும் நான்கு கடற்படை வீரர்கள் வீட்டுக்கு