உள்நாடு

ரஞ்சன் அடுத்த வாரம் விடுதலை

(UTV | கொழும்பு) – சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வாரம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் நீதி அமைச்சு இதுவரை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி ஜனாதிபதி ஆவணங்களில் கையொப்பமிட்டதன் பின்னர் ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்படுவார் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி 04 வருட கடுங்காவல் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் திரு.ரஞ்சன் ராமநாயக்கவிற்கு சுதந்திரம் வழங்குவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டன, அதற்காக அவர் கடந்த 13ஆம் திகதி சத்தியக் கடதாசியில் கையெழுத்திட்டிருந்தார்.

Related posts

சிறைக்கைதிகளின் குடும்பத்தினர் கைதிகளை பார்வையிடலாம்

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

8 மாவட்டங்களில் 401 கொவிட் தொற்றாளர்கள்