உள்நாடு

ஊடகவியலாளர்களின் தொழில் திறனை அதிகரிக்க புதிய திட்டம்

(UTV | கொழும்பு) – ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம், “இலங்கையின் ஊடக நிபுணத்துவ நிறுவனம்” அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதழியல் துறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் நிபுணத்துவத்தை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.

2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 05 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட “இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம்” அமைப்பது தொடர்பான ஒப்புதலுக்கான திருத்தமாக ஊடகத்துறை அமைச்சராக பந்துல குணவர்தனவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டது.

இதன்படி, நிறுவனத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் தயாரிக்கப்பட்ட தோராயமான வரைவின் அடிப்படையில் சட்டமூலங்களை தயாரிப்பதற்கு வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் தலைமையிலான வழிநடத்தல் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றினைக் கண்டறிய தே.செ குழு நியமனம்

விசேட அதிரடிப்படையின் (STF) தலைமை அதிகாரி வெற்றிடம் இன்று நிரப்பப்படும்

சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடும் பாராளுமன்ற சிறப்புரிமை குழு!