(UTV | கொழும்பு) – வருடத்தின் முதல் 4 மாதங்களில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 628 பில்லியன் ரூபா நட்டத்தை ஈட்டியுள்ளதுடன், அதற்கமைய, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முதல் நான்கு மாதங்களில் பொதுத்துறை வர்த்தக நிறுவனங்களில் அதிக நட்டத்தை சந்தித்த நிறுவனமாக மாறியுள்ளது.
அத்துடன், இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் அனைத்து அரச நிறுவனங்களும் பெற்ற 860 பில்லியன் ரூபா நட்டத்தில் 73 வீதமான நஷ்டம்.
இவ்வாறு பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டங்களுக்கு மாற்று விகிதங்கள் மூலம் ஏற்படும் நஷ்டமே பிரதான காரணம். அந்த எண்ணிக்கை சுமார் 550 பில்லியன் ரூபாய்.
மேலும், இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் அனைத்து 52 அரச நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ள 860 பில்லியன் ரூபா நட்டம் 2021 இல் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட மொத்த நட்டத்தை விட அதிகமாகும்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அடுத்தபடியாக அரச நிறுவனங்களுள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 248 பில்லியன் ரூபா அதிக நட்டத்தையும் இலங்கை மின்சார சபை 47 பில்லியனையும் பெற்று இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது.