உள்நாடு

பொருளாதார நெருக்கடிக்கு சபாநாயகரும் பொறுப்பு

(UTV | கொழும்பு) – நிலையியற் கட்டளையை இடைநிறுத்தி நிதிக்குழுவின் தலைவர் பதவியை அரசாங்கத்திற்கு வழங்கிய சபாநாயகரும் சபைத் தலைவருமே இந்த அழிவுக்கு உடந்தையாக இருப்பதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (15) கொழும்பில் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர், நிலையியற் கட்டளைகளின் பிரகாரம், நிதிக்குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், ஆனால் நிலையியற் கட்டளைகளை மீறி, குழுவின் தலைவர் பதவியை அரசாங்கத்திற்கு, நாட்டிற்கு வழங்குவதாகவும் லக்ஷமன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு நிதிக் குழுவின் தலைவர் பதவி வழங்கப்பட்டிருந்தால் மக்களுக்கு உண்மை நிலை தெரிந்திருக்கும் என கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று நாடு தொடர்பான பல முக்கிய தீர்மானங்களை எடுத்திருப்பார் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்திடம் பணம் போதுமானது என்று கூறி மக்களை ஏமாற்றி தன்னிச்சையான அரசாங்க நடவடிக்கைகளின் விளைவுகளை இன்று மக்கள் அனுபவிக்க வேண்டியுள்ளது.

Related posts

தம்மிக பெரேராவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு

ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

இன்றும் நாட்டில் மின்வெட்டு