உள்நாடு

செலவின வரம்புகள் மீறப்பட்டால், நிறுவன தலைவர் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்

(UTV | கொழும்பு) –  அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக திறைசேரி செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு புறம்பாக ஏற்படும் செலவுகளுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, திறைசேரி செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள அரச செலவினங்களைக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கையின் விதிகளை அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்ட சபைகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று (15) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Related posts

5 வகையான உரங்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

editor

யாழில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின விழா!

நாட்டில் மூடப்படும் மதுபானசாலைகள்!