உள்நாடு

இந்திய கடற்படைக்கு சொந்தமான “Dornier 228” இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –   இந்திய கடற்படைக்கு சொந்தமான “Dornier 228” கடல்சார் கண்காணிப்பு விமானம் இன்று (15) இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.

இந்திய சுதந்திரதினமான இன்றைய தினம், குறித்த விமானம் வழங்கப்படுவது சிறப்பாக காணப்படுகின்றது.

இந்திய அரசு இலங்கை அரசுக்கு இதுபோன்ற 3 கண்காணிப்பு விமானங்களை வழங்க உள்ளது, இது அதன் முதல் விமானம் இதுவாகும்.

இந்த விமானம் கையளிக்கப்பட்டதன் பின்னர் ஐந்து இந்திய தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கடந்த மார்ச் மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு

உலகின் சில பகுதிகளில் இன்று முழு சூரிய கிரகணம்!!

கடந்த 24 மணித்தியாலத்தில் 787 : 02