உள்நாடு

வயது 15 இற்கு மேற்பட்ட அனைத்துப் பிரஜைகளுக்கும் புதிய தேசிய அடையாள அட்டை

(UTV | கொழும்பு) – தேசிய அடையாள அட்டைகளைப் பெற்ற 15 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பிரஜைகளுக்கும் அதிகமான பயோ டேட்டா அடங்கிய புதிய கணினி அடையாள அட்டையை வழங்குவதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போதைய தேசிய அடையாள அட்டையின் பயோ டேட்டா மட்டுமின்றி, கல்வி, சுகாதாரம், சமூக நலன்கள், கைரேகைகள், ரத்த வகை போன்ற பல பயோ டேட்டாக்கள் இந்த புதிய கணினி அடையாள அட்டையில் சேர்க்கப்பட உள்ளன.

அடையாள அட்டையின் துஷ்பிரயோகத்தை தடுப்பதுடன் சமூகத்தின் பொருளாதார செயற்பாட்டிற்கு பங்களிப்பதும் இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.

இத்திட்டத்தின்படி தேசிய அடையாள அட்டையைப் பெற்ற 17 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இந்த புதிய கணினி அடையாள அட்டையை வழங்குவதற்கான பதிவு நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த அடையாள அட்டையின் பெயர் தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக “தேசிய அலகு டிஜிட்டல் அடையாள அட்டை” என மாற்றப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பிரதமர் நாளை இந்தியா விஜயம்

பிரதான மார்க்க ரயில் சேவைகள் வழமைக்கு

சிக்கலான சவாலை எதிர்கொள்ள போகும் வட மாகாண சுகாதாரத்துறை!