உள்நாடு

பாகிஸ்தான் போர்க்கப்பல் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS TAIMUR’ என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (ஆகஸ்ட் 12) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அதன்படி, இராணுவ மரபுப்படி கப்பலை ஏற்றுக்கொள்ள கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘PNS TAIMUR’ என்ற கப்பலின் மொத்த நீளம் 134 மற்றும் 169 மீட்டர்கள், அதன் கட்டளை அதிகாரி கேப்டன் எம். யாசிர் தாஹிர் (M Yasir Tahir TI (M)) பொறுப்பேற்பார்.

‘PNS TAIMUR’கட்டளை அதிகாரிக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட கப்பல் ஆக. எதிர்வரும் 15ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அதன் ஊழியர்களும் இலங்கை கடற்படையினரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

‘PNS TAIMUR’ என்ற கப்பல் தீவை விட்டு வெளியேறும் போது மேற்குக் கடலில் இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களுக்கான அறிவித்தல்

சுற்றுலா பயணிகளுக்கு கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவுறுத்தல்

சீனாவில் இருந்து மேலும் 300 மில்லியன் யுவான் மானியம்