(UTV | கொழும்பு) – விபத்தில் படுகாயமடைந்த பழம்பெரும் நடிகர் ஜாக்சன் அந்தோனியின் உடல்நலம் விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (11) காலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
முன்னாள் ஜனாதிபதி, ஜாக்சன் அந்தோணியின் உடல் நிலை குறித்து அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நீண்ட நேரம் உரையாடியதாக தெரியவருகிறது.
ஜாக்சன் அந்தோனியை மீட்க அனைத்து உதவிகளையும் செய்வதாக குடும்ப உறுப்பினர்களுக்கு மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜாக்சன் அந்தோணி திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு தாம் தங்கியிருந்த இடத்திற்கு வந்து கொண்டிருந்த போது அனுராதபுரம் தலாவ பகுதியில் யானை மோதியதில் அவர் பயணித்த விபத்தில் பலத்த காயம் அடைந்தார்.
விபத்தின் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஜாக்சன் அந்தோணிக்கு 7 மணித்தியால சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில், ஜாக்சன் அந்தோணி குணமடைய வேண்டி கடந்த நாட்களில் நாடு முழுவதும் போதி பூஜை மற்றும் பிற வழிபாடுகளை கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.