உள்நாடு

ரஞ்சனுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க பரிந்துரை

(UTV | கொழும்பு) – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரைகளை நீதியமைச்சு ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொண்டதாக நீதியமைச்சர் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

இதன்படி சிறைச்சாலை ஆணையாளரின் அறிக்கை மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நிபந்தனைக்குட்பட்டு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நீதிமன்றம் தொடர்பாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து நீதிமன்றத்தில் வாக்குமூலம் சமர்ப்பித்த நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது பொருத்தமானது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதம மந்திரி கொள்ளுப்பிட்டி பள்ளிசாசலுக்கு விஜயம் நேற்று மீலாத் விழாவில் கலந்துகொண்டார்.

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் பிரச்சினைகள் – இன்று கலந்துரையாடல்

கொரோனா பலி எண்ணிக்கை 581ஆக உயர்வு