விளையாட்டு

இலங்கை சுற்றுப்பயணத்தின் பரிசுத் தொகையை UNICEF க்கு வழங்கியது அவுஸ்திரேலியா

(UTV | அவுஸ்திரேலியா) –   அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணி, இலங்கையில் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் இருந்து $45,000 பரிசுத்தொகையை ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியத்திற்கு (UNICEF) வழங்கியுள்ளது.

நாடளாவிய ரீதியாக இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இருப்பதால், இந்த மனிதாபிமான உதவி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக அணியின் தலைவர்களான ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் முறையே UNICEF அமைப்பிற்கு நிதியைப் பரிந்துரைத்தனர்.

அவர்களின் தாராள நன்கொடைக்கு நன்றி தெரிவித்து, UNICEF அவுஸ்திரேலிய தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஸ்டூவர்ட் தனது அறிக்கையில் தெரிவிக்கையில்;

“கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், கொவிட் 19 டெல்டா அலையின் உச்சக்கட்டத்தின் போது இந்தியாவிற்கு உதவியிருந்தது, தற்போதைய நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு மீண்டும் தாராளமாக உதவியதற்கு அவர்களுக்கு நன்றி. அவுஸ்திரேலியா இலங்கையுடன் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளது, அது போட்டி நாட்களைத் தாண்டியது மற்றும் குடும்பங்களின் நீண்டகால நல்வாழ்வை ஆதரிக்க இந்த நன்கொடை நன்றியுடன் பெறப்பட்டது…”

Related posts

சொந்த மைதானத்தில் வீழ்ந்தது இலங்கை அணி [VIDEO]

LPL தொடரிலிருந்து விலகியதற்கான காரணம்

கிரிக்கெட் தெரிவுக்குழு 5 முக்கிய தீர்மானங்கள்